Home இலங்கை அரசியல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றம்! நிலந்தி மீது கம்பன்பில் குற்றச்சாட்டு

சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றம்! நிலந்தி மீது கம்பன்பில் குற்றச்சாட்டு

0

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன என தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்த கருத்து நீதித்துறையை அவமதிப்பதாகவும், அதன்படி, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தை அவர் செய்துள்ளதாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக நிலந்தி நிலந்தி கொட்டஹச்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்த அறிக்கையின் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (29) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய  உதய கம்மன்பில,

சட்டத்தரணியாக நிலந்தி 

நீதித்துறை தொடர்பாக நாட்டில் ஒரு சாதாரண நபரை விட ஒரு சட்டத்தரணியாக நிலந்தி தெரிவித்த கருத்தை நீதிமன்றம் மன்னிக்காது

நிலந்தி தன்னை ஒரு சட்டத்தரணி என்று அழைத்துக் கொண்டாலும், முடிந்தால் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட சட்டத்தரணி சான்றிதழைப் பகிரங்கப்படுத்துமாறு சவால் விடுகின்றேன்” என கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நட்பு உரையாடலில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் நிலந்தி என கூறப்பட்ட விடயங்கள் இன்றைய ஊடக செய்திகளில் முக்கிய இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version