Home இலங்கை சமூகம் 14 வயதில் அமெரிக்க அணுகுண்டில் இருந்து தப்பியவர் 93 வயதில் இயற்கை இறப்பு

14 வயதில் அமெரிக்க அணுகுண்டில் இருந்து தப்பியவர் 93 வயதில் இயற்கை இறப்பு

0

1945 ஜப்பானின் (Japan) நாகசாகி அணுகுண்டில் இருந்து தப்பியவரும், அமைதிக்காக வாதிடுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான சிகேமி ஃபுகாஹோரி என்பவர் தமது 93ஆவது வயதில் காலமானார்.

2025, ஜனவரி 3ஆம் திகதியன்று தென்மேற்கு ஜப்பானின் நாகசாகி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஃபுகாஹோரி காலமானதாக கத்தோலிக்க தேவாலயம் தெரிவித்துள்ளது.

அவர் முதுமை காரணமாக இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1945 ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று, ஃபுகாஹோரிக்கு 14 வயதாக இருந்த போதே, அமெரிக்கா நாகசாகி மீது குண்டை வீசி அவரின் குடும்பத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தது.

அணு ஆயுதத் தாக்குதல் 

ஹிரோசிமா மீதான அணு ஆயுதத் தாக்குதல் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது, சுமார் 140,000 மக்கள் பலியாகினர்.

குண்டு வீசப்பட்ட போது, குறித்த இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்த ஃபுகாஹோரி, பல ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேச முடியவில்லை, வேதனையான நினைவுகள் மட்டுமல்ல, சக்தியற்றவராகவே உணர்ந்தார் 

எனினும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்பெயினுக்குச் சென்ற போது, 1937ஆம் ஆண்டு ஸ்பானிய உள்நாட்டுப் போரின் போது, 14 வயதாக இருந்த ஒருவர், தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போதே, ஃபுகாஹோரியும் தமது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

இந்தநிலையில், ஃபுகாஹோரியின் இறுதிச்சடங்குகள்; நாளை, திங்கட்கிழமை இடம்பெறவுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version