Home சினிமா நடிகர் விஷால் உடலுக்கு என்ன ஆச்சு.. மேடையில் நடுக்கம்! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஷால் உடலுக்கு என்ன ஆச்சு.. மேடையில் நடுக்கம்! ரசிகர்கள் அதிர்ச்சி

0

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அவர்.

விஷால் 12 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா படம் தற்போது ரிலீஸ் ஆகிறது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டு இருக்கிறார்.

விஷாலுக்கு என்ன ஆச்சு?

விஷால் மேடையில் ஏறி பேசும்போது அவரை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள். அவர் மேடையில் நடுங்கிக்கொண்டே பேசியது பார்த்து பலரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

அவருக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். விஷால் கடும் ஜுரம் இருக்கும் நிலையில் இன்று நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு இப்படி நடந்து இருக்கிறது.

அவர் உடல்நிலையை கவனிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 

NO COMMENTS

Exit mobile version