Home முக்கியச் செய்திகள் நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் நடந்த அற்புதம் : காட்சி கொடுத்த கருடன்

நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் நடந்த அற்புதம் : காட்சி கொடுத்த கருடன்

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 11ம் நாளான இன்றைய தினம் கருட சர்ப்ப திருவிழா நடைபெற்றது.

இத்திருவிழாவில் கருடன் காட்சிகொடுத்த அற்புதம் பக்தர்களை மெய் சிலர்க்க வைத்துள்ளது. 

கருடன் காட்சிகொடுத்த அற்புதம் 

ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதை தொடர்ந்து, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன், உள்வீதி வலம் வந்து, பின்னர் வெளிவீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வலம் வந்து அருள்பாலித்தார்.

நேற்றையதினம் (05.07.2025) வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 10ம் நாள் மாலைத்திருவிழா திருமஞ்சம் நடைபெற்றது.

பதினாறு நாட்கள் இடம்பெறும் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 09ம் திகதி தேர்த்திருவிழா இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version