Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சி எம்.பி குறித்து அமைச்சர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து : ஆளுங்கட்சி எம்.பி எதிர்ப்பு

எதிர்க்கட்சி எம்.பி குறித்து அமைச்சர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து : ஆளுங்கட்சி எம்.பி எதிர்ப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kaviratne) குறித்து அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage) சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன (Kaushalya Ariyarathne) தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் இந்த விடயம் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

முகநூல் பதிவு 

அந்த பதிவில், “நான் அப்போது அவையில் இல்லாவிட்டாலும், பெண்ணியக் கொள்கைகளுக்காக நிற்கும் ஒரு பெண்ணாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் பொருத்தமற்ற அறிக்கையை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நேர்மை, மரியாதை மற்றும் நாம் நீண்ட காலமாகப் போராடி வரும் மதிப்புகளில் வேரூன்றிய ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்தக் கொள்கைகளுக்கான எனது அர்ப்பணிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவை குறிவைத்து ஒரு பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நேற்று (22) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் நளின் ஹேவகேவின் இந்தக் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் (Harsha de Silva) கடும் எதிர்ப்பைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version