Home இலங்கை அரசியல் அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தை பயன்படுத்த முடியாது: நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்

அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தை பயன்படுத்த முடியாது: நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்

0

எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் இனவாதத்தை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி, அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

சட்டம் நடைமுறைபடுத்தல் 

இருப்பினும், இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் சில இடங்களில் பதிவாகியுள்ளன, அவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். 

இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாறுவதற்கு இடமளிக்காமல் இந்த தருணத்தில் அது முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். 

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து, அதற்குப் பதிலாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான, குடிமக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வரத் தயார்.

ஆனால், புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது, நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்து தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்ற தயாராக இருப்பவர்களுக்கு இடமளிப்பதில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version