வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாள் மாலை நேர திருவிழா சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச நிகழ்வுகளை உங்கள் LankaSri News மற்றும் IBC Tamil News, YouTube தளத்தில் நேரலையாக காண முடியும்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை – திருவிழா
https://www.youtube.com/embed/w3C8XYP-2HU
