Home இந்தியா கேரளாவில் கைது செய்யப்பட்ட ஈழத்து வேடன்!

கேரளாவில் கைது செய்யப்பட்ட ஈழத்து வேடன்!

0

இந்தியாவின் மலையாள பொப்பிசை பாடகர் வேடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த பொப்பிசை  இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரன்தாஸ் முரளி மீது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம் மருத்துவர் ஒருவரை பலமுறை அத்துமீறல் செய்ததாக, கேரள காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், இந்த மருத்துவர் கொச்சி நகர காவல்துறையிடம் முறைபாடு அளித்துள்ளார். 

பெண் மருத்துவர்

அதில், 30 வயதான வேடன், 2021 முதல் 2023 வரை பலமுறை அவரை அத்துமீறல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முறைப்பாட்டின்படி, இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களாகி, பின்னர் வேடன் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார்.

பின்னர், அவர் திருமண வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியதால், தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்த மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை – திருவிழா

NO COMMENTS

Exit mobile version