Home முக்கியச் செய்திகள் டயஸ்போராக்களுக்கு அடிபணிந்து வரும் அநுர அரசு – கடுமையாக சாடும் நாமல் எம்.பி

டயஸ்போராக்களுக்கு அடிபணிந்து வரும் அநுர அரசு – கடுமையாக சாடும் நாமல் எம்.பி

0

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் சரிந்துள்ளது, இரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்.

தனது கட்சி நீண்ட காலமாக ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியே இடையே ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் மக்களைப் பிரிப்பதன் மூலம் நடத்தப்படக்கூடாது எனவும் வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் தொலைவில் இருப்பதாகவும், இந்நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் என்றும்  நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு பிரச்சினை

அத்துடன், புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்து வருவதாகவும், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை தவறாகக் கையாள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் உள் மோதல்களால் வீழ்ந்துள்ளன என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version