நாமல் ராஜபக்சவுக்கு நீண்ட காலத்திற்கு இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் செனரத் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ஜனாதிபதியாவது எப்படியிருப்பினும், முதலில் 2029 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு வந்து தனது முகத்தைக் காட்டுமாறு சவால் விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி சலுகை ரத்து
ஓய்வுபெற்ற ஜனாதிபதி சலுகைகளை ஒழிப்பதன் மூலம் ஒரு குடிமகன் ஆண்டுக்கு ரூ. 4 பெறுவார் என்ற கதை பொய் என்றும், மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எதிர்காலத்தில் தெரியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
