Home இலங்கை அரசியல் அநுர அரசுக்கு எதிராக பாரிய மக்கள் அலையுடன் நாமல்! ராஜபக்சர்கள் விடுத்துள்ள சூளுரை

அநுர அரசுக்கு எதிராக பாரிய மக்கள் அலையுடன் நாமல்! ராஜபக்சர்கள் விடுத்துள்ள சூளுரை

0

சமகால அநுர அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளன.

போதைப்பொருள், ஊழல் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தும் அரசாங்கம், மக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

அரசாங்கம் மீது அதிருப்தி

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நுகேகொடையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருமள மக்கள் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் மக்கள் ஒன்று கூடுவார்கள் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


நாமல் சூளுரை

ராஜபக்சர்களுக்கு ஆதரவான மக்கள் சக்தியின் பலத்தையும் அரசாங்கத்திற்கு காட்டவுள்ளதாக நாமல் சூளுரைத்துள்ளார்.

அரசாங்கத்தின் அடக்குமுறை, பொய்கள் மற்றும் ஏமாற்றுதலுக்கு மக்கள் தயாராக இல்லை. நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம். பின்னர் புலம்ப வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னைத் தேடி வரும் மக்களை பார்வையிடும் நோக்கில், இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்த பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version