தன்னை கைது செய்ய அரசு தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்த வாரம் கைது செய்யப்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் நலன் தொடர்பில் விசாரிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் நாமல் சென்றிருந்தார்.
அரசு நடவடிக்கை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கிரிஸ் பரிவர்த்தனை ஒப்பந்தம் தொடர்பான போலியான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்யத் தயாராகி வருகின்றனர்.
அதன்படி, அடுத்த வாரம் முதல் அவர்களுடன் தான் இணைய வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
