Home இலங்கை அரசியல் நரேந்திர மோடியை சந்தித்த நாமல்

நரேந்திர மோடியை சந்தித்த நாமல்

0

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன்
போது, ​​இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடியைச் ( Narendra Modi) சந்தித்துள்ளார்.

இந்தியத் தலைவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தமது X பக்கத்தில்
பகிர்ந்துள்ள அவர், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில்
மோடியின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.

பொருளாதாரம் வேகமாக வளர்ந்து…

இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது,

அதன் பொருளாதாரம் வேகமாக
வளர்ந்து வருகிறது என்று ராஜபக்ச தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2025 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்
மற்றும் வணிகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

NO COMMENTS

Exit mobile version