Home இலங்கை அரசியல் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் நாமல் ராஜபக்‌ச சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் நாமல் ராஜபக்‌ச சந்திப்பு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச இலங்கைகான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை
சந்தித்து உரையாடியுள்ளார்.

நாமல் ராஜபக்‌ச நேற்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிரகத்துக்கு
திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இருதரப்பு உறவுகள்

அதன்போது பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது பிராந்திய சூழ்நிலை மற்றும் இரு சகோதர நாடுகளுக்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்
தகவல் வெளியிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version