Home இலங்கை அரசியல் புதிய வரிக்கொள்கைகளால் சிரமப்படும் வணிகங்கள் : கடுமையாக சாடும் நாமல்!

புதிய வரிக்கொள்கைகளால் சிரமப்படும் வணிகங்கள் : கடுமையாக சாடும் நாமல்!

0

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைளால் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குருநாகலில் (Kuranegala) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, “நாட்டில் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதுடன் மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவுகளும் உயர்ந்துள்ளன.

திறைசேரி வருமானம்

தற்போதைய அரசாங்கம் ஒரு நியாயமற்ற வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரி அமைப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொதுமக்களால் செலுத்த முடியாத புதிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் திறைசேரி வருமானம் அதிகரிக்காது. அத்தகைய கொள்கை மக்களுக்கு அநீதி இழைக்கின்றது.

சில அரசியல்வாதிகள் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விட மலிவான விலையில் இறக்குமதி செய்யும் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர்.

ஆனால் அவை, பொதுமக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ சிறந்ததாக இருக்காது“ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version