Home இலங்கை அரசியல் நாமல் ராஜபக்சவிடம் சி.ஐ.டி இரண்டரை மணித்தியால விசாரணை

நாமல் ராஜபக்சவிடம் சி.ஐ.டி இரண்டரை மணித்தியால விசாரணை

0

புதிய இணைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஏன் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு எனக்குத் தெரியாது. நானே போய்ப் பார்க்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்

தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக்கூடிய ஒரே முறை இவ்வாறு விசாரணைகளில் பங்கேற்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக நேற்று (23) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/namal-presence-criminal-investigation-department-1729746460

NO COMMENTS

Exit mobile version