Home இலங்கை அரசியல் ரணில் – அனுரவிற்கு நாமல் விடுத்துள்ள சவால்

ரணில் – அனுரவிற்கு நாமல் விடுத்துள்ள சவால்

0

சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவிற்கு அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa)  சவால் விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று (17) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “தங்களது கட்சியின் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.

சவால்

திருடர்கள் என எம்மீது ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவில் அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு சவால் விடுக்கிறேன்.

அவ்வாறு ஏதேனும் சொத்துக்கள் காண்பிக்கப்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

பல கோப்புகளை வைத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) நான் சவால் விடுக்கிறேன்.

நாம் பிரசாரங்களுக்குச் செல்லும் போது தோல்வியடைந்துவிடுவோம் என்றெல்லாம் பலவாறு சிலர் எமக்கு பயம் காட்டுகின்றனர்.

பல தோல்விகளைச் சந்தித்து, மீண்டெழுந்து வந்துள்ள நாம் அவ்வாறான கருத்துகளைக் கண்டு அஞ்சமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/namal-rajapaksa-challenges-corruption-claims-1726632238

NO COMMENTS

Exit mobile version