பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) இன்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
தனது பயணத்தின் போது, இலங்கை சார்பாக இரங்கல் தெரிவித்து, இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதில் மன்மோகன் சிங்கின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாமல் ராஜபக்ச எடுத்துரைத்தார்.
உலக தலைவர்கள் இரங்கல்
இராஜதந்திரம் மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதில் அவர் ஆற்றிய முக்கிய பங்கிற்காக, உலக தலைவர்கள் மன்மோகன்சிங்கிற்கு தமது இரங்கல்களை வெளியிட்டிருந்தனர்.
முன்னதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மன்மோகன்சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தார்.
இதேவேளை மன்மோகன்சிங்கின் உடல் இன்று அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.