Home இலங்கை அரசியல் ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாமல் எதிர்ப்பு

ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாமல் எதிர்ப்பு

0

விஜேவீர மற்றும் ஜே.வி.பிக்கு எதிராக அன்று ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக நாம் முன் நின்றோம். அதேபோல் ஜே.வி.பி இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 ரணிலின் கைதையடுத்து ‘நீதிக்கான குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 நீதிக்கான குரல்

தொடந்து கருத்த தெரிவித்த அவர்,

நாம் எப்போதும் ஒரே கொள்கையை பின்பற்றுகிறோம். அவர்
நீதித்துறையில் அநேக அரசியல் கட்சிகள் உள்நுழைய முயற்சித்த போதும் நீதித்துறை சுயாதீனமாக இயங்கியதை நாம் கண்டுள்ளோம்.

அதேபோல் நீதித்துறையில் எமக்கு நம்பிக்கை உண்டு.
ரணிலின் கைதையடுத்து ‘நீதிக்கான குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 ராஜபக்சர்களுக்கு எச்சரிக்கை

 ராஜபக்சர்களுக்கே இவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.விக்ரமசிங்கவை கைது செய்தது தான் புதிது.
இவர்களின் எச்சரிக்கைக்கு பயந்தவர்கள் அல்ல நாம்.மேலும் கைதாகும் போது கெஞ்ச வேண்டாம் என்றனர்.
நாங்கள் அவ்வாறு கெஞ்சம் போவதில்லை.

அதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
அரசாங்கம் நினைத்தால், எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டால் நாம் மக்கள் பக்கம் நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version