Home இலங்கை அரசியல் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் விசாரணை கோரும் நாமல்

அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் விசாரணை கோரும் நாமல்

0

நாட்டில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) முன்வைத்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த அமைப்புகளின் நிதி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, இந்த அமைப்புகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியிருத்தியுள்ளார்.

அரசு சாரா நிறுவனங்கள் 

சில அரசு சாரா நிறுவனங்கள் முறையான பதிவு இல்லாமல் செயற்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் வெளியிடப்படாத வெளிநாட்டு நிதியைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்கள் ஊடாக, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

போரின் பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு என்ற சாக்குப்போக்கின் கீழ் இந்த அமைப்புகள் செயல்பட்டாலும், அவற்றின் நிதி ஆதாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தெளிவாக இல்லை என்று நாமல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தால் இது தொடர்பான சந்தேகம் தெளிவாக எழுப்பப்படும் போது, இலங்கை அரசாங்கம் இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கக்கூடாது என நாமல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version