Home இலங்கை அரசியல் மாவையின் உடல்நிலை குறித்து நாமல் கூறிய விடயம்

மாவையின் உடல்நிலை குறித்து நாமல் கூறிய விடயம்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின்(ITAK) மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ‘X’ தளத்தில் அவர் இட்ட பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பதாகவும் நாமல் கூறியுள்ளார்.

செயற்கை சுவாச உதவி

தற்போது, மாவை சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version