Home இலங்கை அரசியல் ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்கு சென்ற நாமல்.. அம்பலமாகும் இரகசிய தகவல்

ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்கு சென்ற நாமல்.. அம்பலமாகும் இரகசிய தகவல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் நாரஹேன்பிட்ட
இல்லத்திற்கு அண்மையில் விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜி.எல். பீரிஸின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ச அங்கு சென்றதாக அரசியல்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் நிலைமை

கடந்த வாரம், சனிக்கிழமை மாலை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும்
பேராசிரியர்கள் குழு ஒன்று ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்குச் சென்றது.

அதன்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கேட்ட
கேள்விகளுக்கு நாமல் ராஜபக்ச சிறப்பாக பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த
ராஜபக்ச குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version