இலங்கை மத்திய வங்கியின்(sri lanka central bank) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe), உலகின் மிக உயர்ந்த மத்திய வங்கி ஆளுனர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை அண்மையில் இந்த ஆண்டு மத்திய வங்கியாளர்கள் முன்னேற்ற அறிக்கையில் “ஏ” தரம் பெற்ற மத்திய வங்கி ஆளுநர்களின் பெயர்களை வெளியிட்டது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கும் “ஏ” தரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் சிறப்பான செயற்பாடு
நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்ட சவாலான காலங்களில் மத்திய வங்கியின் ஆளுநரால் வழங்கப்பட்ட விதிவிலக்கான தலைமைத்துவம் மற்றும் மூலோபாய நிபுணத்துவம் மற்றும் பணவீக்க முகாமைத்துவம், பொருளாதார வளர்ச்சி, நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி வீதக் கட்டுப்பாடு போன்ற முக்கிய துறைகளில் கலாநிதி வீரசிங்க அடைந்த வெற்றியை இது பிரதிபலிக்கின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியாளர்கள் முன்னேற்ற அறிக்கை 1994 முதல் குளோபல் ஃபைனான்ஸ் இதழால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
குளோபல் ஃபைனான்ஸ் இதழின் இந்த தரவரிசையில் 100க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த மத்திய வங்கி ஆளுநர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு வகையில் தர நிர்ணயம்
குளோபல் ஃபைனான்ஸ் ஜேனல், பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகளின் சாதனை, நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தரவரிசைகளை வழங்குகிறது.
மத்திய வங்கி ஆளுநருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தரம் “ஏ” மற்றும் குறைந்த தரம் “F” ஆகும். “A” மதிப்பீடு “A”பிளஸ் “A” மைனஸ் ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.