Home இலங்கை அரசியல் இலங்கை விஜயம் குறித்து நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு

இலங்கை விஜயம் குறித்து நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு

0

இந்தியப் பிரதமர் நரேந்திர (Narendra Modi) மோடி எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளக் கணக்காக எக்ஸ் (X) பக்கத்தில் இலங்கைக்கான பயணம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “எனது இலங்கை விஜயம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியா – இலங்கை உறவு

இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக என்னுடைய இந்த பயணம் அமைகிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி நாங்கள் மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ள காத்திருக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்திற்கு விஜயம்

இதேவேளை தாய்லாந்தில் (Thailand) நாளை (04) நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் தாய்லாந்திற்கு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளார்.

குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்றதையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் மற்றும்  பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version