Home அமெரிக்கா அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தில் 2000 ஊழியர்களை பணிநீக்கம்! ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம்

அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தில் 2000 ஊழியர்களை பணிநீக்கம்! ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம்

0

அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிநீக்கம் 

இதன் காரணமாக பல அறிவியல் திட்டங்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பணிநீக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஊழியர்கள் GS-13 முதல் GS-15 வரையிலான பதவிகளில், மூத்த நிலை அரசாங்க பதவிகளில் உள்ளவர்கள் என்றும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே பணி ஓய்வு வழங்கியும் ஏற்கனவே பதவி விலகலை செய்ய முன்வந்தவர்களை பணியில் இருந்த விடு பெற ஒப்புதல் வழங்கப்படுகிறது.

தகவலின்படி, 1,818 ஊழியர்கள் தற்போது அறிவியல் அல்லது மனித விண்வெளிப் பயணம் போன்ற முக்கிய பணிப் பகுதிகளில் பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணிபுரிகிறார்கள்.

இதுகுறித்து செய்தி தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் கூறுகையில், நாங்கள் அதிக முன்னுரிமை பெற்ற பட்ஜெட்டுக்குள் செயல்படுவதால், எங்கள் பணிக்கு நாசா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version