Home முக்கியச் செய்திகள் விண்வெளியிலிருந்து பூமியை வந்தடைந்த செய்தி…!

விண்வெளியிலிருந்து பூமியை வந்தடைந்த செய்தி…!

0

சுமார் 140 மில்லியன் மைல் (14 கோடி) தொலைவில் விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு லேசர் சமிக்ஞை ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாசா கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் விண்ணுக்கு சைக் 16 (Psyche 16) என்ற சிறுகோளை (asteroid) நோக்கி அனுப்பிய சைக் (Psyche) என்ற விண்கலத்தில் (spacecraft) இருந்தே இந்த லேசர் சமிக்ஞை பெறப்பட்டுள்ளது.

இந்த சைக் 16 (Psyche 16) என்ற சிறுகோளானது செவ்வாய் (Mars) கிரகத்திற்கும் வியாழனுக்கும் (Jupiter) இடையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்…பின்னணி இதுதான்!

லேசர் தொடர்புகள்

சைக் விண்கலம் ஆழமான விண்வெளி ஒளியியல் தகவல் தொடர்பு அமைப்புடன் (deep space optical communications system) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், லேசர் தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த லேசர் தொடர்பு தற்போதுள்ள வானொலி (Radio) அலைகளை விட வேகமாக செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சைக் விண்கலத்தின் லேசர் தகவல்தொடர்புகள் சுமார் 140 மில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து தரவுகளை அனுப்பியது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.

பூமியில் காந்தப்புலத்தின் தோற்றம்…உண்மையை உடைக்கும் பாறை கண்டுபிடிப்பு!

பாரம்பரிய முறைகள்

இந்த திட்ட செயற்பாடுகளின் தலைவர் மீரா சீனிவாசன் இந்த லேசர் தரவுகள் குறித்து பேசியபோது, கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் திகதி 10 நிமிடத்திற்கு லேசர் தரவு இணைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி தற்போதுள்ள பாரம்பரிய முறைகளை விட லேசர் தகவல் தொடர்பு சிறப்பாக செயல்படுகிறதா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார், இந்நிலையில் சைக் விண்கலம் 25 Mbps வேகத்தில் தரவுகளை பூமிக்கு அனுப்புவது கண்டறியப்பட்டுள்ளது.
 

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி…பார்வையிடும் நேரம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version