Home முக்கியச் செய்திகள் நாட்டில் மில்லியன் கணக்கான குரங்குகள் : வெளியானது விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை

நாட்டில் மில்லியன் கணக்கான குரங்குகள் : வெளியானது விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை

0

கடந்த மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பின் அறிக்கை இன்று (12.06.2025) வெளியிடப்பட்டுள்ளது.

இது விவசாய அமைச்சினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வரும் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது.

விலங்குகளின் எண்ணிக்கை

தேசிய விலங்கு கணக்கெடுப்பு கடந்த மார்ச் 15ஆம் திகதி காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது.

அதன்படி, காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை, ஒருவர் தனது தோட்டம், சாகுபடி நிலம், புனித இடங்கள் மற்றும் பிற பொது இடங்களை 5 நிமிடங்கள் கண்காணித்து,

அந்த நேரத்தில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள், மர அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து , கணக்கெடுப்பு தாளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அன்றைய தினம் கணக்கெடுக்கப்பட்ட தரவுகள் இன்று வெயியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version