Home இலங்கை சமூகம் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

0

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) வெளிநாடுகளுக்குச் செல்வது  தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பொய்யான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடுகளுக்குச் சென்று இணையக் குற்றவாளிகளிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அவதானம் 

மேலும், பொதுமக்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து அல்லது அது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள தேவை ஏற்படின் https://nahttf.gov.lk/index.php என்ற இணையத்தளத்தை அணுகலாம். 

இன்றைய சூழ்நிலையில், வேலைவாய்ப்புக்களுக்காகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையில் பலர் இணைய மோசடிக்காரர்களால் ஏமாற்றப்படுகின்றார்கள். 

இதன் காரணமாக, பொதுமக்கள் அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதமான முறைகளில் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version