Home இலங்கை அரசியல் தேசிய பட்டியல் விவகாரம்: சஜித் அணிக்குள் வெடித்தது பிளவு

தேசிய பட்டியல் விவகாரம்: சஜித் அணிக்குள் வெடித்தது பிளவு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் ஐவரை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த ஐவரில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும் பண்டார(Ranjith Madduma Bandara), கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்(Imtiaz Baqir Makar), டலஸ் அழகப்பெரும(Dallas Alahapperuma)

இரான் விக்கிரமரத்ன(Iran Wickramaratne) மற்றும் பேராசிரியர் சரித ஹேரத்(Charitha Herath) ஆகியோரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(Mano Ganesan) தனக்கும் தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளார்.இதனையடுத்தே பிரச்சினை கட்சிக்குள் வெடித்துள்ளது.

பங்காளிக் கட்சியொன்றுக்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும்(Tissa Attanayake) வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர் ஆகிய இருவருக்குமே வாய்ப்பு வழங்குவது தேவையற்றது என்று மற்றொரு சாரார் தெரிவித்துள்ளனர்.

இன்று இறுதி காலக்கெடு

இதேவேளை நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் (21ஆம் திகதி) நடைபெறவுள்ள நிலையில், தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் அந்தந்த கட்சிகள் இன்று (20ஆம் திகதி) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அந்த வேட்பாளர்கள் அன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது. 

NO COMMENTS

Exit mobile version