Home இலங்கை அரசியல் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த  சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (04.12.2024) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பட்டியல்

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன (Anuradha Lanka Jayaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நியமனம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version