நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன்1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) 05 தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பட்டியல் ஆசனங்கள்
மேலும், 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு (NDF) 02 தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), இலங்கைத் தமிழரசு கட்சி (ITAK), சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), சர்வஜன அதிகாரம் (SJ) ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, தேசிய பட்டியல் ஆசனம் உட்பட தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்று தனிப் பெரும்பாண்மையைப் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களுக்கு கிடைத்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 3 ஆசனங்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 3 ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சர்வஜன அதிகாரத்திற்கு ஒரு ஆசனமும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஒரு ஆசனமும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும், சுயேட்சைக்குழு 17 இற்கு ஒரு ஆசனமும், சிறிலங்கா தொழிலாளர் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.