Home இலங்கை அரசியல் நாங்கள் யாரையும் தாக்கவில்லை – தேசிய மக்கள் சக்தி விசனம்

நாங்கள் யாரையும் தாக்கவில்லை – தேசிய மக்கள் சக்தி விசனம்

0

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியினால், தேசிய நூலக ஆவணச் சேவை சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றின் போது மோதல் நிலையொன்று ஏற்பட்டிருந்தது.

இந்த தாக்குதலை வனாத்தமுல்ல அமைப்பாளர் மற்றும் கிருலப்பனை பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினரே நேற்று நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை நிராகரிப்பு

இந்நிலையில், கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற மாநாட்டின் மீது தமது கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி (National People’s Power) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கும் தமது கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தொடர்பில்லை என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version