Home இலங்கை அரசியல் ஊழல் அற்ற ஆட்சிக்கு அநுரவே தீர்வு: தேசிய மக்கள் சக்தி உறுதி

ஊழல் அற்ற ஆட்சிக்கு அநுரவே தீர்வு: தேசிய மக்கள் சக்தி உறுதி

0

ஊழல் அற்ற ஆட்சிக்கு ஒரே தீர்வு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக ஒருவரே என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜெயராசசிங்கம் கஜன் தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நேற்று(13) இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஊழல் அற்ற நாடு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று பல்வேறுபட்ட கட்சிகள் நாங்களும் ஊழலை ஒழிப்போம் என கூறுகிறார்கள்.

எனினும், ஊழலை மேற்கொள்பவர்கள் எவ்வாறு ஊழலை ஒழிக்க முடியும் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இதுவரை காலமும் சிந்தித்ததை போல இனியும் சிந்திக்க முடியாது.

இது எங்களுடைய நாடு. எமது நாட்டை முன்னேற்ற வேண்டிய பங்கு எமக்கும் உள்ளது.

எனவே, நாட்டை ஒரு சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான ஒரு ஆட்சியாளரை நாம் தெரிவு செய்ய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version