Home இலங்கை சமூகம் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு

0

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் மன்னார் பிரதேச செயலாளர்
பிரிவில் உள்ள பெரிய கரிசல் கிராமத்தில் நாளை வெள்ளிக்கிழமை (21) தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புதிய நீர் இணைப்புகள் வழங்கும் முகாம்
இடம் பெற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு இதனை சபை
அறிவித்துள்ளது.

புதிய நீர் இணைப்புகள் வழங்கும் முகாம் ஆரம்ப நிகழ்வு பெரிய கரிசல்
பள்ளிவாசலில் நாளை வெள்ளிக்கிழமை (21) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை இடம்
பெற் உள்ளதோடு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புதிய நீர்
இணைப்புகள் வழங்கும் நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய நீர் இணைப்பு

பொதுவாக, ஒரு புதிய நீர் இணைப்பு பெற தேசிய நீர்வழங்கல் சபை அலுவலகத்திற்குச்
சென்று, புதிய இணைப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு, அதை நிரப்பி
தேவையான ஆவணங்களுடன் மீண்டும் அலுவலகத்தில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், அதிகாரிகள் உங்கள் இல்லத்துக்கு சென்று தகுதி ஆய்வு மேற்கொண்டு,
அதன் அடிப்படையில் மதிப்பீடு தயாரித்து வழங்குவார்கள். அதன் பிறகு,
மதிப்பீட்டின் அடிப்படையில் தொகையை வங்கியில் சென்று செலுத்திய பின்னர் உங்கள்
இல்லத்திற்கான புதிய இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு செய்யும் நடைமுறையில், பல முறை அலுவலகத்திற்குச் சென்று வரவும், பல
நாட்கள் எடுத்துக் கொள்ளவும் நேரிடுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்கவும், மக்களின் நேரத்தையும் முயற்சியையும்
மிச்சப்படுத்தவும், செயல்முறையை விரைவு படுத்தவும், ஒரே நாளில் விண்ணப்பம்
முதல் கட்டணம் செலுத்துதல் வரை அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும்
முகாம்கள் மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தேவையற்ற அலைச்சல் இன்றி புதிய
நீர் இணைப்புக்கான சேவைகளை பெறுமாறு கேட்டுக் கொள்வதாக மன்னார் தேசிய நீர்
வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

செய்தி – நயன்

NO COMMENTS

Exit mobile version