Home சினிமா என்னதான் நல்ல படம் கொடுத்தாலும்.. நடிகர் நட்டி நட்ராஜ் ஆதங்கத்துடன் பதிவு

என்னதான் நல்ல படம் கொடுத்தாலும்.. நடிகர் நட்டி நட்ராஜ் ஆதங்கத்துடன் பதிவு

0

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறி தற்போது பல படங்களில் குணச்சித்திர ரோல்கள், நெகடிவ் ரோல்களில் மிரட்டி வருபவர் நட்டி நடராஜ்.

அவர் தற்போது கம்பி கட்ன கதை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து, கடந்த அக்டோபர் 17ம் தேதி ரிலீஸ் ஆனது. Dude, பைசன் போன்ற படங்கள் அதே தேதியில் ரிலீஸ் ஆனதால் கம்பி கட்ன கதை படத்திற்கு மிக குறைந்த தியேட்டர்களே கிடைத்து இருக்கிறது.

நட்டி நட்ராஜ் ஆதங்கம்

இந்நிலையில் தனது படத்தை பார்க்க மக்கள் யோசிப்பதாக நட்ராஜ் ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

“என்னதான் நல்ல படம் குடுத்தாலும் பாக்க யோசிப்பீங்க இல்ல..கம்பி கட்ன கதைய பாத்து ரசிச்ச அனைவருக்கும் நன்றி..” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version