இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற இன அழிப்பிற்கு எதிராக இன்று பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கலந்துக்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தனபாலன் குவேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இனத்திற்காகவும், தமிழின இருப்பிற்காகவும் போராடும் தமிழினம் சார்ந்த கட்சிதான் தழிழரசுக்கட்சி(Itak).
அந்தவகையில் எம்மக்களுக்காக நிற்காமல் கட்சியையே நீதிமன்றில் நிறுத்தியுள்ளமையானது, எம் இனத்தினுடைய இருப்பை எவ்வாறு தக்க வைக்கபோகின்றோம் என்ற கேள்வியெழும்பியுள்ளது.
இது சிலரின் பதவி ஆசையால் தான் உருவாகியுள்ளது, இது இப்போது தொடங்கியது இல்லை” என்றார்.
இந்நிலையில், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளையின் வருகையின்போது இனஅழிப்பிற்கு எதிராக நடத்திய போராட்டங்களில் இன்று பதவிக்கு ஆசைப்படுபவர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை” என்றார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,