கார்த்திக்
எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் டாப் நாயகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் முத்துராமன்.
இவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் கார்த்திக்.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?… சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ
முதல் படமே அவருக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்த அடுத்தடுத்து இளஞ்ஜோடிகள், நேரம் வந்தாச்சு, கேள்வியும் நானே பதிலும் நானே, கண்ணே ராதா, ராஜ மரியாதை, மௌன ராகம் என இப்படி கார்த்தியின் வெற்றிப் படங்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.
வைரல் வீடியோ
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கார்த்திக்கின் உடல்நிலை குறித்து நிறைய வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில் கார்த்திக் தனது வீட்டில் நின்றுகொண்டு கோட் சூட் அணிந்து சேரை தூக்கி எறிந்து சிலம்பர் சுற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை நடிகர் சித்ரா லட்சுமணன் தான் பகிர்ந்துள்ளார்.
