Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக நவீன் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக நவீன் நியமனம்

0

ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க(Navin Dissanayaka) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமைக் காரியாலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

யோசனைக்கு அங்கீகாரம்

இந்த கூட்டத்தின்போது கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்கவை நியமிப்பது குறித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நவீன் திஸாநாயக்க இதற்கு முன்னதாக கட்சியின் தேசிய அமைப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பதுடன் பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

விளையாட்டுத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சராக நவீன் திஸாநாயக்க பதவி வகித்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version