Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசியக்கட்சியின் துணை தலைவர் பதவிக்கு புதிய நியமனம்

ஐக்கிய தேசியக்கட்சியின் துணை தலைவர் பதவிக்கு புதிய நியமனம்

0

முன்னாள் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சரும்,
சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க, ஐக்கிய தேசியக்
கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(14.02.2025) கொழும்பில் நடைபெற்றபோது, இந்த நியமனத்தை,
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான நவீன் திசாநாயக்க, முன்னைய அரசாங்க
நிர்வாகங்களில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

காமினி திசாநாயக்கவின் மகன்

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், இங்கிலாந்தின் மிடில்
டெம்பிளில் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர் காமினி திசாநாயக்கவின்
மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version