நவ்யா நாயர்
நவ்யா நாயர், மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்.
தமிழில் ஆட்டோகிராப், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சில நேரங்களில், ரசிக்கும் சீமானே, நந்தனம், அழகிய தீயே ஆகிய படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
திருமணத்திற்கு பின்பு பெரிதாக நடிக்கவில்லை, விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக உள்ளார். தற்போது இவர் மல்லிகை பூ கொண்டு சென்றதால் அபராதம் கட்டிய விவகாரம் வெளியாகியுள்ளது.
நடிகை பேட்டி
விக்டோரியாவில் உள்ள மலையாள அமைப்பினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கேரளத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளார் நவ்யா நாயர்.
அவர் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும் அவரது கைப்பையில் இருந்த ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக ரூ. 1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரணம், ஆஸ்திரேலியாவில் பல்வேறு பொருள்களை விமானப் பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது, அதில் ஒன்று தான் மல்லிகைப் பூ.
