Home சினிமா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்.. நயன்தாரா ஓபன் டாக்

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்.. நயன்தாரா ஓபன் டாக்

0

நயன்தாரா

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஓபன் டாக்

அதற்கு, ” லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தால் நான் பல பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறேன்.

திருமணத்திற்கு பின் முதல் விசேஷம்.. நாக சைதன்யா – சோபிதா எங்கு சென்றுள்ளனர் பாருங்க

கடந்த 5 ஆண்டுகளாக நான் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரிடமும் டைட்டில் கார்டில் என் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என்று பலமுறை சொல்லி உள்ளேன்.

அந்த பட்டத்தை பார்க்கும் போதே எனக்கு பயமாக இருந்தது. நான் சிறந்த நடிகை என்று எப்போதும் சொல்லி கொண்டது இல்லை.

ஆனால், இன்று இந்த இடத்திற்கு வருவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். ரசிகர்கள் என்மீது கொண்ட அன்பால் என்னை இவ்வாறு அழைக்கின்றனர்” என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version