நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.
கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.
நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, மூக்குத்தி அம்மன் 2, என பல திரைப்படங்கள் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
படையப்பா நீலாம்பரி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லை.. இவரா?
என்னென்ன தெரியுமா?
வெவ்வேறு பிசினஸில் முதலீடு செய்து அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். நயன்தாரா பல்வேறு பிரபல பிராண்டுகளின் சொகுசு கார்கள் கொண்ட ஒரு சிறந்த கார் சேகரிப்பை (car collection) வைத்துள்ளார்.
அதை தொடர்ந்து, சொந்த வீடுகளை வைத்திருக்கிறார். இந்த வீடுகளின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடிக்கு மேல் இருக்கலாம். அதுமட்டுமின்றி, சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
நயன்தாரா, 9 ஸ்கின் என்ற சரும பராமரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், இவருடைய சொத்து மதிப்பு மட்டும் ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
