டித்வா புயலின் தாக்கத்தினால் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறு கடற்றொழில் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு
மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் சங்கம்
இதன்போதே மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன்போது கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஏனைய
தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய உரிய தீர்வுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறீதரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
