Home முக்கியச் செய்திகள் முல்லைத்தீவில் போதைப்பொருள் விற்பனை! கணவன் – மனைவி உட்பட ஐவர் கைது

முல்லைத்தீவில் போதைப்பொருள் விற்பனை! கணவன் – மனைவி உட்பட ஐவர் கைது

0

Courtesy: தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கணவன், மனைவி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் வீட்டில்
விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றையதினம் (15) குறித்த சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபாய் பணம்
மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள்
ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு 

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை
பரிசோதகரின் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவின்
உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் புதுக்குடியிருப்பு
காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் இன்றையதினம் (16) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version