நீ நான் காதல்
Iss Pyaar Ko Kya Naam Doon என்ற சீரியலின் தமிழ் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் நீ நான் காதல்.
பிரேம் ஜாக்கப், வர்ஷினி சுரேஷ், சாய் காயத்ரி, ஷங்கரேஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒளிபரப்பான இந்த தொடர் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது.
முரளி, அபி மீது வைத்த காதலால் அவர் பழிவாங்கும் கதையாக இந்த தொடர் சென்றது.
தற்போது உண்மை அனைத்தும் வெளிவந்து தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.
கிளைமேக்ஸ்
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது இன்றோடு முடிந்துவிட்டது. ஏப்ரல் 25, இன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாரிசுகளுடன் தொடர் முடிகிறது.
