Home இலங்கை அரசியல் மலையகத்தில் காணி வேண்டும்! இல்லையேல் வடக்கு கிழக்கில் குடியேறுவோம் : மனோ கணேஷன்..

மலையகத்தில் காணி வேண்டும்! இல்லையேல் வடக்கு கிழக்கில் குடியேறுவோம் : மனோ கணேஷன்..

0

மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கு, காணி உரிமை அவசியமானது.

இந்த நிலையில்,மலைசரிவு இல்லாத பாதுகாப்பான சாலையோர இடங்களில் அவர்களுக்கு
காணி தர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன்
கோரியுள்ளார்.

 மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி தொலஸ்பாகே தோட்டத்துக்கு இன்று சென்ற
போதே அவர் இதனை கோரியுள்ளார்.

காணி உரிமை

 எனினும் அரசாங்கம் அதனை தர தவறுமானால், வடகிழக்கில் குடியேற விருப்பமா? என்று
கூடியிருந்த மக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

 பாதிக்கப்பட்ட மக்களும் தாம் தயார் என்றும் தமக்கு சொந்த காணியே வேண்டும்
என்று கூறினர்.

இந்த நிலையில், அரசியல்வாதிகள் அல்லாத புலம்பெயர் தமிழ் நண்பர்கள், காணிகளை
தருவதாக தனக்கு சொல்கிறர்கள்.

அவர்கள் அவற்றை தந்தால், மலையக மக்களிடம் அவற்றை ஒப்படைக்கப்போவதாக மனோ கணேஷன்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version