Home சினிமா நீயா நானா புகழ் தொகுப்பாளர் கோபிநாத் அண்ணன் யார் தெரியுமா?.. இந்த சீரியல் நடிகர் தானா?

நீயா நானா புகழ் தொகுப்பாளர் கோபிநாத் அண்ணன் யார் தெரியுமா?.. இந்த சீரியல் நடிகர் தானா?

0

நீயா நானா

தொகுப்பாளர் கோபிநாத் என்பதை தாண்டி நீயா நானா கோபிநாத் என்றால் தான் மிகவும் பிரபலம்.

பல வருடங்களாக டிஆர்பி குறையாமல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவை மிகவும் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக கொண்டு செல்வதன் மூலம் மக்களுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் கோபிநாத்.

வெளியே போன மீனா, வீட்டிற்குள் வந்த புதிய பெண், தெறித்து ஓடிய விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ

சமீபத்தில் வேள்பாரி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, கோபிநாத்தை பார்த்தால் எனக்கு எப்பவுமே ஆச்சரியமாக இருக்கும்.

நீயா நானா நிகழ்ச்சிக்கு எப்படி ஆடிஷன் பண்றாங்க, எப்படி அந்த தலைப்பை எடுக்குறாங்க என்று யோசிப்பேன்.

பாட்டும் நானே பாவமும் நானே என்கிற மாதிரி எல்லா அணியிலும் இவரே இருப்பாரு, இவரே வக்கீல், இவரே ஜட்ஜ், அருமை அருமை என பாராட்டியிருந்தார்.

சகோதரர்

நீயா நானா புகழ் கோபிநாத்தின் அண்ணன் வேறு யாரும் இல்லை தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு தொடரில் சூர்யாவின் அப்பாவாக நடிக்கும் பிரபாகரன் சந்திரன் தான்.

இவர் இதற்கு முன் நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், பாரதிதாசன் காலனி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
இதோ கோபிநாத் மற்றும் அவரது சகோதரர் எடுத்த போட்டோ, 

NO COMMENTS

Exit mobile version