Home இலங்கை அரசியல் புத்தர் பிறந்த நேபாளத்தை கொளுத்திய இளைஞர்கள் – கடும் சீற்றத்தில் ரணில்

புத்தர் பிறந்த நேபாளத்தை கொளுத்திய இளைஞர்கள் – கடும் சீற்றத்தில் ரணில்

0

புத்தர் பிறந்த நேபாளத்தில் இது போன்ற மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை

நாடாமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இறுதியில், அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின் பொறுப்பாகும்.

புத்தர் பிறந்த நேபாளம், இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், இதுபோன்ற மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, புத்தர் போதித்த தர்மத்தை நேபாளத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


you may like this 


https://www.youtube.com/embed/p3zT3rE9B4U

NO COMMENTS

Exit mobile version