Home சினிமா நேசிப்பாயா: திரை விமர்சனம்

நேசிப்பாயா: திரை விமர்சனம்

0

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நேசிப்பாயா’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்

அதிதி ஷங்கர் மீது காதல் வயப்படும் ஆகாஷ் முரளி, அவரிடம் அதனை வெளிப்படுத்துகிறார்.

முதலில் மறுக்கும் அதிதி பின்னர் சில காரணங்களை கூறி, ஒருவேளை அப்படி நடந்தால் உன்னை விட்டு போய்டுவேன் என்று கூறுகிறார்.

அதற்கு ஆகாஷும் சம்மதிக்க இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் சூழல் உருவாகிறது.

அதன் பின்னர் அதிதி வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார்.

ஆனால் அங்கு கொலை வழக்கு ஒன்றில் சிக்கும் அதிதி சிறைக்கு செல்கிறார்.

2 ஆண்டுகள் பிரிவுக்கு பின்னர் காதலி சிறைக்கு சென்றதை அறிந்து ஆகாஷ் போர்ச்சுக்கல் செல்கிறார்.

இதனைத் தொடர்ந்து அதிதி கொலை செய்தாரா? ஆகாஷ் எப்படி அவரை வழக்கில் இருந்து மீட்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.  

படம் பற்றிய அலசல்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு விஷ்ணுவர்தன் தமிழில் மீண்டும் படம் இயக்கியுள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷிற்கு இது முதல் படம்.

ஆனால் நடிப்பு, சண்டைக்காட்சிகளில் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இது நல்ல அறிமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதிதி ஷங்கர் பல இடங்களில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். அதேபோல் நடிகர் ராஜா சைலண்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார்.

முக்கியமான ரோலில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் குஷ்பூ தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்குகிறார்கள்.

மனைவி, குழ்நதைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்.. அழகிய புகைப்படம் இதோ

‘லீலை’ ஷிவ் பண்டிட்டிற்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கச்சிதமாக அதனை செய்துள்ளார். நடிகர் பிரபு ஒரு சீனில் வந்தாலும் லெஃப் ஹேண்டில் தனது கேரக்டரை செய்துவிடுகிறார்.

அதிதிக்காக வாதாடும் வக்கீலாக வரும் கல்கி கோச்சின், அடிக்கடி ஆகாஷை கலாய்ப்பது போல் திட்டும் இடங்கள் சிரிக்கும்படியான காமெடி.

சிறையில் இருக்கும் அதிதி தன்னை பார்க்க மறுத்தாலும், அவரது குரலை கேட்டு கண்ணீர் விடும் காட்சியில் ஆகாஷ் முரளி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

விஷ்ணுவர்தன் எப்போதும்போல் தனது ஸ்டைலான மேக்கிங் மூலம் மீண்டும் மிரட்டியிருக்கிறார்.

ரொமான்டிக், த்ரில்லர் படமாக இருந்தாலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.

ஆனால் அதனை நிரப்பும் வகையில் அமைகிறது யுவனின் இசை. படத்திற்கு மிகப்பெரிய பலமே அவரது பாடல்களும், பின்னணி இசையும்தான் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார் யுவன்.

அனைத்து பாடல்களுமே ரசித்து கேட்கும் ரகம்.

உண்மையான குற்றவாளி யார் என்றே எளிதில் நமக்கு தெரிந்துவிடும் என்பதுபோல் திரைக்கதை நகர்கிறது. ஆனால் கிளைமேக்ஸில் வரும் அந்த ட்விஸ்ட் முற்றிலும் கணிக்க முடியாதது. 

க்ளாப்ஸ்

தொய்வில்லாத திரைக்கதை

யுவனின் இசை

நடிகர்களின் ஆக்டிங்

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

பல்ப்ஸ்

வழக்கமான கதைதான்

மொத்தத்தில் விஷ்ணுவர்தன், யுவன் காம்போவில் டீசண்டான என்டெர்டெய்ன்மென்ட் படமாக நேசிக்க வைத்துள்ளது ‘நேசிப்பாயா’.

NO COMMENTS

Exit mobile version