சூர்யா
சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ரெட்ரோ படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், OG சூர்யாவை மீண்டும் எப்போது திரையில் பார்ப்போம், அவரை கொண்டாடி தீர்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்பை கருப்பு திரைப்படம் பூர்த்தி செய்யும் என்றும் அவர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு வெளிவந்திருக்க வேண்டிய நிலையில், சில காரணங்களால் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.
சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் எடுத்த போட்டோ இணையத்தில் வைரல்.. அதிகரித்த எதிர்பார்ப்பு!
இதை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா 47
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ‘சூர்யா 47’ திரைப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஓடிடி
இப்படத்தின் பூஜை போடப்பட்ட கையோடு ஓடிடி உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை ரூ. 23 கோடிக்கு தற்போது வாங்கியுள்ளது. இது அடிப்படை விலையாகும், இதன்பின் படம் திரையரங்கில் எவ்வளவு வசூல் செய்கிறதோ, அதை பொறுத்து மீதி விலை ஓடிடி நிறுவனத்திடம் இருந்து தரப்படும் என கூறப்படுகிறது.
